மசாஜ் நிலையத்தின் போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை - 6 பெண்கள் உட்பட 7 பேர் கைது!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை சீதுவை பொலிஸார் நேற்று முன் (09) மாலை அதிரடியாகச் சுற்றிவளைத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் போது பெண்கள் உட்பட 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்கொழும்பு வீதிப் பகுதியில் நீண்டகாலமாக மசாஜ் நிலையம் என்ற பெயரில் இந்த விடுதி இயங்கி வந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த இடத்தை பொலிஸார் முற்றுகையிட்டனர்.

இந்தச் சோதனையின் போது, விடுதியை நிர்வகித்து வந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரும், அங்கு பணியாற்றிய 6 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 25 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் கடுவலை, கம்பஹா, நீர்கொழும்பு, பதலங்கல மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


​இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
புதியது பழையவை