லிட்ரோ எரிவாயு நிறுவனம் நேற்று (10.03.2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.300 அதிகரித்து ரூ.3,990 ஆகவும், 05 கிலோ சிலிண்டரின் விலை ரூ.120 அதிகரித்து ரூ.1,602 ஆகவும் உள்ளது.
எரிவாயு சிலிண்டர்களின் விலைகள்
இதற்கிடையில், 2.3 கிலோ சிலிண்டரின் விலை ரூ.56 அதிகரித்து புதிய விலை ரூ.750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று முதல் கொழும்பு மாவட்டத்தில் வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் பின்வருமாறு:
12.5 கிலோ எரிவாயு சிலிண்டர்: ரூ. 3,990
05 கிலோ எரிவாயு சிலிண்டர்: ரூ. 1,602
2.3 கிலோ எரிவாயு சிலிண்டர்: ரூ750