ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான போர் இன்று ஒரு மாதம் கடந்தும் தொடர்ந்து நடைபெறுகின்றது.
இந்தப் போரில் முக்கிய தலைவர்கள், இராணுவ வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய கிழக்கு போரில் தமிழ் அமெரிக்க இராணுவ வீரரான விசாகன் சத்தியமூர்த்தி என்பவரும் கொல்லப்பட்டுள்ளார்.
தமிழ் அமெரிக்க இராணுவ வீரர்
1993 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி அமெரிக்க இராணுவத்தில் இணைந்த இவர் கடந்த மார்ச் மாதம் 21 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவருடைய இறுதி நிகழ்வுகள் ஏப்ரல் 2ஆம் திகதி மதியம் 1.00 மணியளவில் 950 S Sepulveda Blvd, Los Angeles, CA 90049, United States என்ற முகவரியில் அமைந்துள்ள Los Angels National Cemetoryயில் நடைபெறவுள்ள நிலையில் அமெரிக்க இராணுவ வீரர்களால் இறுதி இராணுவ மரியாதையும் செலுத்தப்படவுள்ளது.
இந்த நிலையில் மத்திய கிழக்கு போரில் கொல்லப்பட்ட முதல் தமிழ் அமெரிக்க இராணுவ வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.