அமெரிக்கா வரலாற்றிலேயே மாபெரும் எதிர்ப்பு பேரணியாக உருவெடுக்கும் ட்ரம்புக்கு எதிரான போராட்டம்.!

டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக 'அரசர்கள் வேண்டாம்' எனும் கோசத்தில் பாரிய போராட்டங்கள் அமெரிக்கா முழுதும் நடந்து வருகின்றன.

இலட்சக்கணக்கான மக்கள் இணைந்து ட்ரம்பின் அரசாங்கத்திற்கு எதிராக 'அரசர்கள் வேண்டாம்' என்று கூறி பேரணியைத் தொடர்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அமெரிக்கா முழுவதும் சுமார் 3,000 இடங்களில் இந்தப் போராட்டங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன, தொடங்கிய இரண்டு முதல் மூன்று மணி நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் இந்தப் போராட்டங்களில் இணைந்துவிட்டார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த 'அரசர்கள் வேண்டாம்' போராட்டம் அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டமாகக் கருதப்படுகிறது. 

சில நகரங்களில் தெருக்களில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மற்ற இடங்களில் பாடல்கள், நடனங்கள் மற்றும் உரைகளைக் கேட்க மக்கள் கூட்டம் கூடுகிறது. 

அதிபர் டொனால்ட் டிரம்பின் முட்டாள்தனமான கொள்கைகள், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் அவர் ஈரானுடன் தொடங்கிய தேவையில்லாத போருக்கு எதிராகவும் மக்கள் இந்தப் பேரணியை நடத்துகின்றனர்.
புதியது பழையவை