மட்டக்களப்பு, கல்லடி கல்லடியில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல அமைப்பின் ஏற்பாட்டில், தொழிற்கல்வி பயிற்சியினை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா இன்று(29.03.2026) ஞாயிற்றுக்கிழமை கல்லடி Green Garden மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்ததுடன், அவர்களின் திறமைகளை பாராட்டி வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
சான்றிதழ் வழங்கிய பின் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன் அவர்கள்
"பெண்கள் தொழிற்கல்வி பெற்று, அதன் மூலம் பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு அடைவது என்பது ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கு மிக அவசியமான ஒன்றாகும்.
இத்தகைய பயிற்சிகள் பெண்களின் சுய மரியாதையையும் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும்," எனத் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.