மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு.!

​"பெண்களின் தலைமைத்துவம் - செழிப்பான தேசத்தின் பெருமை" எனும் தொனிப்பொருளின் கீழ், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு இன்று (10.03.2026)ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

​பிரதேச செயலாளர்  உ. உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

​இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெண் சுயதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு வாழ்வாதாரக் கடன்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், ஏற்கனவே வெற்றிகரமாகத் தொழில்களை முன்னெடுத்து வரும் பெண் தொழில்முயற்சியாளர்கள் தமது சவால்கள் மற்றும் அனுபவங்களை ஏனையோருடன் பகிர்ந்து கொண்டனர்.



​சமூகத்தில் தனித்துவமாக விளங்கும் பெண் தொழில்முயற்சியாளர்களின் சேவையைப் பாராட்டி இதன்போது அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, சிறுவர் இல்ல மாணவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வழங்கிய கலை நிகழ்வுகள் விழாவிற்கு மெருகூட்டின.

​இந்நிகழ்வில் அதிதிகளாக 
​திருமதி சத்யகௌரி தரணிதரன் (உதவி பிரதேச செயலாளர்)
​வ. நாகேஸ்வரன் (கணக்காளர்)
​கே. கருணாநிதி (நிருவாக உத்தியோகத்தர்)
​மற்றும் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மகளிர் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

​இவ்வருட மகளிர் தினத்தை முன்னிட்டு, சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரால் பல்வேறு தொடர் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

குறிப்பாக, பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனை மற்றும் கண்காட்சி, பட்டிமன்றம், மற்றும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ஆகியனவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை