இன்றைய வானிலை முன்னறிவிப்பு.!

வெப்பச் சுட்டெண்ணின் தாக்கத்தினால் நாடு முழுவதிலும் மனித உடலினால் அதிகாரித்த வெப்பநிலை உணரப்படுகின்றது. அதாவது மனித உடலில் குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்துவது வெப்பச் சுட்டெண்ணாகும். இது சாரீரப்பதன் மற்றும் வெப்பநிலை இரண்டிற்கும் இடையிலான தொடர்பாகும். இதை ஒரு அதிகரித்த வெப்பநிலை என கருத முடியாது.

வெப்பத் தாக்கமானது சூரியனின் அதிகரித்த வெப்பநிலையைக் குறிக்கும். பொதுவாக வெப்பமானது 40 பாகை செல்சியசு இலும் அதிகரிக்கும் போதே வெப்பத் தாக்கம் ஏற்படுகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் தற்போது 36, 37 பாகை செல்சியஸ் அளவுகளில் வெப்பம் அதிகரித்துக் காணப்படுகிறது. 

இந்தியாவைப் போன்று 40 பாகை செல்சியஸ் இலும் கூடிய அளவில் வெப்பம் அதிகரிக்கக் கூடிய சாத்தியம் குறைவு ஏனெனில் இலங்கை நான்கு பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவாக காணப்படுவதாலும் இலங்கையைச் சூழ ஏறக்குறைய 103 ஆறுகள் பாய்வதனாலும் அத்துடன் இயற்கைத் தாவர போர்வையை கொண்டிருப்பதனாலும் மேலும் உயர் மலைப் பிரதேசங்களில் வெப்ப நழுவு வீதம் தாக்கம் செலுத்துவதனாலும் இந்தியாவைப் போலல்லாது ஓரளவு அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

இந்த வெப்பநிலை அதிகரிப்பானது மே மாதம் நடுப் பகுதியுடன் குறைவடையக்கூடும். ஏனெனில் மே மாதம் முதல் தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காலநிலை ஆரம்பமாகும். தற்போது நாட்டில் நிலவிக்கொண்டிருப்து இடைப் பருவப் பெயர்ச்சிக் காலநிலை. ஏப்ரல் மாதம் அளவில் சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுப்பதனாலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

இவ்வாறான சூழ்நிலைகளில் மக்கள் அவதானமாக செயற்படுவதுடன் அதாவது வெப்பத்தினால் ஏற்படும் நீர் இழப்பை தவிர்த்துக் கொள்ள அடிக்கடி நீர் ஆகாரம் பருக வேண்டும், தேவை இல்லாமல் வெளியில் காலை 10.00 மணி முதல் பின்னேரம் 04.00 வரையில் நடமாடுவதை தவித்துக் கொள்ள வேண்டும், மெல்லிய கலரிலான இறுக்கம் குறைந்த ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

இதேவேளை வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், தென், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பச் சுட்டெண்ணை உணரக்கூடியதாக இருக்கும்.

நாடு முழுவதும் மழை இன்றிய வறட்சியான வானிலை காணப்படுகின்ற போதிலும் சில இடங்களில் குறிப்பாக சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

சிரேஷ்ட வானிலை அதிகாரியும் ஊடகவியலாளருமாகிய மொஹமட் சாலிஹீன்.
புதியது பழையவை