மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை.!

தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு, தினமும் இரண்டு மணி நேர மின்வெட்டை  நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திற்குப் பரிந்துரைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

மத்திய - கிழக்கில் நிலவும் மோதல்களால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஒத்திவைப்பு விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.


ஏற்கனவே தரமற்ற நிலக்கரி பிரச்சனையால் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டும்.

2022ஆம் ஆண்டுகளில் கொத்மலை நீர் வற்றும் வரை மின்சாரம் வழங்கியதால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டோம்.

இறுதியில் 8, 10 மற்றும் 12 மணித்தியாலங்கள் மின்சாரம் தடை செய்ய நேரிட்டது.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் சிக்கலை தவிர்க்க தற்போதே 2 மணித்தியாலங்கள் மின்சாரத்தை தடை செய்து மிகப்பெரிய நெருக்கடியை தவிர்க்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை