மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள காத்தான்குடி பகுதியில், இன்று (26.03.202 மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் முச்சக்கரவண்டியும் காரும் மோதி விபத்துக்குள்ளாகின.
இன்று மாலை காத்தான்குடி பிரதான வீதியூடாக பயணித்த முச்சக்கரவண்டியும் காரும் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தின் காரணமாக குறித்த இரு வாகனங்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், விபத்து இடம்பெற்ற பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், போக்குவரத்தைச் சீர்செய்யும் பணிகளிலும் ஈடுபட்டனர்.
அதிவேகமாக வாகனங்களை செலுத்துவதே இவ்வாறான விபத்துகளுக்கு பிரதான காரணம் என ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மற்றும் பாதசாரிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர்.