தமிழ் ஈழம் எனப் பொறிக்கப்பட்ட மிதிவெடி மீட்பு!

திருகோணமலையில் வெற்றுக்காணியிலிருந்து வெடிக்காத நிலையில் மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மூதூர் காவல் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் - அப்ரார்நகர் பகுதியில் இருந்தே இந்த மிதிவெடி மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை நேற்று (19-03-2026)ஆம் திகதி  முன்னெடுக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காவல்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இம்மிதிவெடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இம்மிதிவெடியில் ஜொனி என்றும் தமிழீழம் என்றும் தமிழில் எழுதப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளால் இம்மிதிவெடி புதைக்கப்பட்டிருக்கலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.

இம்மிதிவெடியானது மூதூர் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் செயலிழக்கச் செய்யப்படவுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை