திருகோணமலை, சீனக்குடா பகுதியில் இன்று (17.03.2026) இரவு இடம்பெற்ற கோர மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர், உடனடியாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் திருகோணமலை, மூதூர் நெய்தல் நகர் பகுதியைச் சேர்ந்த மர்சூத் முகமட் சப்ரின் (40 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்போது அன்னாரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.