தேசிய மட்டத்தில் நடைபெற்ற சமூக விஞ்ஞானப் போட்டியில், பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலய மாணவன் தேவநாயகம் செஷாந் முதலாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இப்போட்டியின் இறுதி முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
தரம் 11 இல் கல்வி பயிலும் செஷாந், இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ள ஒரு திறமையான மாணவர் ஆவார். இவரது இந்த வெற்றியானது பாடசாலைக்கும், ஒட்டுமொத்த பட்டிருப்பு வலயத்திற்கும் பெரும் புகழைத் தேடித்தந்துள்ளது.
கடந்த ஆண்டுகளில் இப்போட்டியில் செஷாந் காட்டிய முன்னேற்றம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
2023 தேசிய மட்டத்தில் 4 ஆம் இடம்.
2024 தேசிய மட்டத்தில் 3 ஆம் இடம்.
2025 (தற்போதைய முடிவு) கடும் முயற்சியினால் தேசிய மட்டத்தில் முதலாம் இடம்.
இதேவேளை, இதே பாடசாலையிலிருந்து இப்போட்டியில் பங்குபற்றிய மாணவன் சு.அஷ்சயன் தேசிய மட்டத்தில் 7 ஆம் இடத்தைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
மாணவர்களின் இந்தச் சாதனைக்குப் பின்னணியில் நின்று வழிகாட்டிய பாடசாலை அதிபர் திருமதி சிறிப் பிரியா வேழவேந்தன், முழுமையான பயிற்சிகளை வழங்கிய ஆசிரியை திருமதி சாரதா பாக்கியநாதன், மற்றும் பிரதி அதிபர், ஏனைய ஆசிரியர்களுக்குக் கல்விச் சமூகம் மற்றும் ஊர் மக்கள் தமது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
(ரஞ்சன்)