மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் கார் விபத்து.!

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் ஈச்சிலம்பற்று பகுதியில் சற்று முன்னர்(08.03.2026) இடம்பெற்ற கார் விபத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை இணைக்கும் பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று, ஈச்சிலம்பற்று பகுதியில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
​சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் அப்பகுதி மக்கள் விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

கார் வீதியை விட்டு விலகி பலத்த சேதங்களுக்கு உள்ளாகியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கான காரணம் மற்றும் காரில் பயணித்தவர்களின் நிலை குறித்த மேலதிக விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பாக ஈச்சிலம்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை