மட்டக்களப்பில் சந்திவெளி சித்திவிநாயகர் பாடசாலை மாணவர்கள்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பு ஹெறிடேச்சினால் பாடசாலை மாணவர்கள்களுக்கு பாதணிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (07.03.2026) சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலத்தில் இடம்பெற்றது.

பின்தங்கிய மற்றும் வறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெறிடேச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பல்வேறு வேலைத்திட்டங்களில் ஒன்றாக தெரிவுசெய்யப்பட்ட 57 மாணவர்களுக்கு பாடசாலை பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் திருமதி டி.சுரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ரோட்டரி கழகம் க.நவநீதன், ச.ஹரிபிரசாத், தே.நவநீதன் அ.கிறிஸ்டிராஜ் ஆகியோர் கலந்து கொண்டதுடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை