யாழ்ப்பாணத்தில் இருந்து பாலைதீவு திருவிழாவுக்கு பக்தர்களை ஏற்றி சென்ற படகு இன்று(06.03.2026)விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததுடன் 11 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் அப்பகுதி மக்கள் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடலில் காணாமல் போனோரை தேடும் பணியில் சுழியோடிகள் களமிறக்கப்பட்டுள்ளனர்.