எரிபொருள் விநியோக முறையில் மாற்றம் - இன்று தீர்மானம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை முன்னிட்டு வாகன இலக்கத் தகட்டின் கடைசி எண் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறையானது, எதிர்வரும் நாட்களில் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் (30) எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மே மாதம் நடுப்பகுதி வரையில் எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. எனினும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஒற்றை, இரட்டை எண்கள் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படும் முறையில் மாற்றங்கள் அவசியமா என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது.

எரிபொருள் விநியோகத்தை முறையாக முகாமைத்துவம் செய்யவும் வரிசைகளைக் குறைக்கவும் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதால் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமெனவும் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை