படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் "தராகி" தர்மரத்தினம் சிவராம் அவர்களின் 21வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (28.04.2026)ஆம் திகதி மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு ஊடக மையத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் இந்த நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
திகதி:- 28.04.2026 (இன்று)
நேரம்:-காலை 9:00 மணி
இடம்:-படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி, காந்தி பூங்கா, மட்டக்களப்பு.
கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிவராம் அவர்களின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் இன்றைய தினத்தில் மட்டக்களப்பில் மலர் அஞ்சலி மற்றும் நினைவு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.