ஈழ விடுதலைப் போராட்டத்தின் எழுச்சிக் குரல்- 'தேனிசை செல்லப்பா' காலமானார்!

​ஈழ விடுதலைப் போராட்டப் பாடல்கள் மற்றும் உணர்ச்சிமிகு தமிழ் பாடல்கள் மூலம் உலகத்தமிழர்களின் இதயங்களில் இடம்பிடித்த புகழ்பெற்ற பாடகர் 'தேனிசை செல்லப்பா' அவர்கள் இன்று (08.04.2026)இயற்கை எய்தினார். 

அவருக்கு வயது 85 ஆகும்.


​ஆரம்பக்கால வாழ்க்கை மற்றும் அரசியல் மேடை
​திருநெல்வேலி மாவட்டம் சிங்கிலிப்பட்டி கிராமத்தில் 1941, ஏப்ரல் 21 அன்று பிறந்தவர் செல்லப்பா. இவரது கலைப்பயணம் தமிழக அரசியல் களத்தில் இருந்தே தொடங்கியது.

​முன்னாள் அமைச்சர் சி.பா. ஆதித்தனார் அவர்கள் நடத்திய அரசியல் மேடை ஒன்றில் பாடப் பாடகர்கள் யாரும் முன்வராத சூழலில், துணிச்சலுடன் மேறியேறிய செல்லப்பா, தனது கணீரென்ற குரலால் அனைவரையும் ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து ஆதித்தனாரின் அரசியல் பிரசாரங்களில் நிரந்தரப் பாடகராக நியமிக்கப்பட்ட அவர், திராவிட இயக்க மேடைகளிலும் தொடர்ந்து முழங்கி வந்தார்.

​ஈழத் தமிழர்களுக்காக ஒலித்த முதல் குரல்

​1964-ல் ஸ்ரீமாவோ -  ஒப்பந்தத்தின்படி மலையகத் தமிழர்கள் அகதிகளாக இந்தியா அனுப்பப்பட்டபோது, அவர்களின் வலியைப் பிரதிபலிக்கும் வகையில்,

​"செந்தமிழா மனம் பொங்குதடா.. சிங்களர் கொடுமை மிஞ்சுதடா..." என்ற பாடலை ஏ.எல். நாராயணன் வரிகளில் பாடினார். 

இந்தப் பாடல் தமிழகம் மற்றும் ஈழத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

​ஈழப் போராட்டமும் தேனிசை செல்லப்பாவும்
​விடுதலைப் புலிகளின் செய்தித்தொடர்பாளர் பேபி சுப்பிரமணியம் அவர்களின் அறிமுகத்தால், ஈழப் புரட்சிப் பாடல்களைப் பாடத் தொடங்கினார்.

1990-ஆம் ஆண்டு ஈழத்திற்கு நேரடியாக அழைக்கப்பட்ட அவர், யாழ்ப்பாணக் கோட்டை மைதானத்தில் சுமார் 5 லட்சம் மக்கள் திரண்டிருந்த பிரம்மாண்ட மேடையில் தனது பாடல்களால் உணர்ச்சிப் பெருக்கினை ஏற்படுத்தினார்.

​மட்டக்களப்பு உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இவர் நடத்திய இசைக்கச்சேரிகள் இன்றும் மக்களால் பேசப்படுபவை. கவிஞர்கள் காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை ஆகியோரின் வரிகளுக்குத் தனது குரல் மூலம் உயிர் கொடுத்தவர் இவர்.

​ஈழவிடுதலை எழுச்சி
​தமிழர் தாகம்
​வீரத்தின் வேர்கள்
​தமிழின உணர்வாளர்கள் மற்றும் இசைப்பிரியர்கள் அன்னாரின் மறைவிற்குத் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

​"புரட்சிப் பாடல்கள் ஒலிக்கும் வரை, தேனிசை செல்லப்பாவின் குரல் காற்றெங்கும் நிலைத்திருக்கும்."
புதியது பழையவை