​மட்டக்களப்பில் ஆச்சரியம் - நான்கு கால்களுடன் பிறந்த அபூர்வக் கோழிக் குஞ்சு!


​மட்டக்களப்பு மாவட்டம், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில் நான்கு கால்களுடன் கோழிக் குஞ்சு ஒன்று பிறந்துள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

​சம்பவம் குறித்து தெரியவருவதாவது.

மீராவோடை எல்லை வீதியைச் சேர்ந்த முகம்மட் நஸீர் என்பவர், கடந்த  (02.04.2026)ஆம் திகதி 11 முட்டைகளைத் தனது வீட்டில் அடைகாக்க வைத்துள்ளார். 

இதில் நேற்று (21.04.2026)ஆம் திகதி 9 கோழிக் குஞ்சுகள் பொரிந்துள்ளன.

​அவ்வாறு பொரிந்த குஞ்சுகளில் ஒன்று, மற்றைய குஞ்சுகளை விட மாறுபட்டு, நான்கு கால்களுடன் காணப்படுவதைக் கண்ட உரிமையாளர் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்துள்ளார்.

​உரிமையாளர் கருத்து.

கறுப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் கலந்த நிலையில் காணப்படும் இந்த அபூர்வக் கோழிக் குஞ்சு, மற்றைய குஞ்சுகளைப் போலவே மிகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் காணப்படுவதாக அதன் உரிமையாளர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்த செய்தி காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து, அந்த அழகிய மற்றும் அரிய வகை கோழிக் குஞ்சை அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

​இயற்கையின் இந்த வினோதப் படைப்பு தற்போது மீராவோடை பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
புதியது பழையவை