திருகோணமலை மாவட்டம்
மூதூர் - கிண்ணியா வீதியில் இன்று (22.04.2026)மாலை இடம்பெற்ற கோர விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது.
இன்று (22) மாலை மூதூர் - கிண்ணியா வீதியூடாகப் பயணித்த பயணிகள் பேருந்து ஒன்று, இரண்டாவது பாலத்திற்கு அருகாமையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தின் போது பேருந்தில் பயணித்த பயணிகள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தையடுத்து அவ்விடத்தில் மக்கள் கூடியதுடன், காயமடைந்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.