மட்டக்களப்பு பாலையடிவட்டை இராணுவ முகாம் விடுவிப்பு - சென்று பார்வையிட்ட இரா.சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேசசபைக்குட்பட்ட பாலையடி வட்டை கிராமத்தில் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக பிரதேசசபைக்குரிய  பொதுச்சந்தை கட்டட தொகுதியினை இராணுவம் கையகப்படுத்தியிருந்த நிலையில் ,


போரதீவுப்பற்று பிரதேசபையில் கடந்த 2025 ஆண்டு சபையின் இரண்டாவது அமர்வின் போது உப தவிசாளர் தங்கராசா-கயசீலன் இராணுவ முகாமை  எழுப்புவதற்கு கொண்டுவரப்பட்ட தீர்மானம்.

இதனை போரதீவுப்பற்று  பிரதேசசபையின் தவிசாளர் விமலநாதன் -மதிமேனன் அவர்களினால் பிரேரனை சபைக்குவழங்கப்பட்டுள்ளன.

இது பெருபான்மையினால் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த தீர்மானம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  அவர்களின் கவனத்துக்கு பிரதேசசபைஊடாக கொண்டுவரப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  தொடர்ச்சியாக பாராளுமன்ற அமர்வு களிலும்,பாதுகாப்பு அமைச்சின் விசேட கூட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்ட  பெரும் முயற்சியினாலும் , இந்த காணி விடுவிக்கப்பட்டதாகவும், இதற்கு ஜனாதிபதிக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக தெரிவித்தார்.


போரதீவுப்பற்று பிரதேச சபையினை பொறுப்பேற்ற காலத்திலிருந்து பிரேரணைகளை ஜனாதிபதிக்கும் , பாதுகாப்பு அமைச்சுக்கும் அனுப்பியதாகவும்,போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தெரிவித்தார்.

பொதுச்சந்தை கட்டடத்தினை இராணுவத்தினர் முற்றாக இடித்து நொறிக்கியமை மிகுந்த வேதனையளிப்பதாகவும், குறித்த இடத்திற்கு நேற்று மாலை(02.04.2026)கள விஜயம் மேற்கொண்டிருந்த பா.உ இரா.சாணக்கியன் தெரிவித்தார்.



இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன்- மதிமேனன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம்- வினோராஜ், உப தவிசாளர் தங்கராசா - கயசீலன், வசீகரன் , பிரதேச சபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் எனப்பலரும் பிரன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை