வெளிநாட்டு சுற்றுலாப் பெண் மீது பாலியல் வன்கொடுமை.!

மாத்தறை வெலிகம பகுதியில் துருக்கி நாட்டுப் பெண் ஒருவர் நேற்று பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் அவரிடமிருந்து பணமும் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சுற்றுலா வழிகாட்டிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிகமவிலுள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்த 31 வயதுடைய துருக்கி நாட்டுப் பெண்ணே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட இரண்டு சுற்றுலா வழிகாட்டிகளும் அந்தப் பெண்ணுடன் ஒரு மதுபானகத்துக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.

அதன் பின்னரே அவர்கள் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வில் ஈடுபடுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் தற்போது மேலதிக மருத்துவப் பரிசோதனைகளுக்காக மாத்தறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட குறித்த சுற்றுலா வழிகாட்டிகள், அந்தப் பெண்ணின் ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி அவரது கணக்கிலிருந்து 114,000 ரூபா பணத்தையும் திருடியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புதியது பழையவை