கோட்டைக்கல்லாறு திருவள்ளுவர் வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி.!


மட்டக்களப்பு மாவட்டம் ​பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டியானது நேற்று(09.04.2026)பி.ப 2.30மணிக்கு  கோட்டைக்கல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.

​பாடசாலை முதல்வர் திருமதி சிறிப்பிரியா வேழவேந்தன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவஞானம் சிறிதரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

​அதிதிகளாக கோட்டைக்கல்லாறு ஆலயங்களின் வண்ணக்கர் எம்.விநாயகமூர்த்தி, காத்தான்குடி ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய விரிவுரையாளர் பி.சுவேந்திரராஜா, பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் கே.சுவர்ணராஜன் மற்றும் பழைய மாணவர் சங்கச் செயலாளர் வி.ரமேஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும்,  பாடசாலைகளின் அதிபர்கள், கிராம சேவை உத்தியோகத்தர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
தரணி, தாரகை, தண்மதி ஆகிய மூன்று இல்லங்களுக்கு இடையே நடைபெற்ற விறுவிறுப்பான போட்டிகளின் முடிவில்
​முதலாம் இடம் ,தாரகை இல்லம்
​இரண்டாம் இடம்,தரணி இல்லம்
​மூன்றாம் இடம், தண்மதி இல்லம்
​வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அதிதிகளினால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவின் சிறப்பம்சமாக, வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பாடசாலையின் முன்னாள் அதிபர் பி.சுவேந்திரராஜா ஆகியோர் பாடசாலைச் சமூகத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இப்பொது விளையாட்டுப் போட்டி மிகவும் சிறப்பாக நிறைவடைந்தது.
புதியது பழையவை