இலங்கையை சேர்ந்த கயல் சீரியல் நடிகை சுபாஷினியின் உடல் தற்போது இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த சீரியல் நடிகை சுபாஷினி சில நாட்களுக்கு முன்னர் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
தென்னிந்தியாவில் பிரபல கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர் பிபின் என்பவரை திருமணம் செய்துள்ளார். அடிக்கடி படப்பிடிப்புக்களுக்காக சென்னை வருவராம். ஏனைய நேரங்களில் கணவருடன் பெங்களூரில் வசித்து வந்துள்ளார். இவர் தவறான முடிவு எடுக்க முன்னர் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்துள்ளார். மகிழ்ச்சியான வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். இப்படி இருக்கையில் இவருடைய இழப்பு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை தந்துள்ளது.
பொலீசாரின் விசாரணையில் கணவருடன் வீடியோ காலில் தகராறு காரணமாக தான் சுபாஷினி தவறான முடிவு எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னர் இவருடைய உடல் பல சிக்கல்களுக்கு மத்தியில் குடும்பத்தினரின் முயற்ச்சியால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.