லிட்ரோ எரிவாயு விலை அதிரடியாக உயர்வு!

​நாட்டில் நிலவும் பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், லிட்ரோ (Litro) நிறுவனத்தின் வீட்டு உபயோக எரிவாயு விலைகள் இன்று(05.04.2026) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

​உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு மற்றும் இறக்குமதி செலவீனங்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

​புதிய விலை விபரங்கள்:-

​அதிகரிப்பின் படி, சந்தையில் விற்பனை செய்யப்படும் மூன்று வகையான எரிவாயு உருளைகளின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளன.

​12.5 கிலோ கிராம்:- ரூபா 775 ஆல் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூபா 4,765 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

​5 கிலோ கிராம்:-ரூபா 308 ஆல் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூபா 1,910 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

​2.3 கிலோ கிராம்:- ரூபா 140 ஆல் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூபா 890 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

​இந்தத் திடீர் விலை உயர்வு பொதுமக்களின் மாதாந்த குடும்பச் செலவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக உணவகங்கள் மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்கள் இந்த விலை மாற்றத்தினால் பெரும் பாதிப்புக்குள்ளாக நேரிடும் என கவலை தெரிவிக்கின்றனர்.
புதியது பழையவை