மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி பகுதியில் மின்சாரம் தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று (11.04.2026) ஆம் திகதி காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது.
கச்சக்கொடி 135C கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட சுவாமிமலை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை வீரசிங்கம் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று காலை தனது பயிர்ச்செய்கை நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்வதற்காக, அருகில் இருந்த நீரோடும் வாய்க்காலிலிருந்து மின்சார நீர்ப்பம்பி (Water Pump) மூலம் நீர் இறைக்க இவர் முயற்சித்துள்ளார்.
இதன்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.