மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசத்தில்
தூய்மை மற்றும் மக்களின் ஆரோக்கியத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களைப் பாராட்டி கௌரவிக்கும் விசேட விருது வழங்கும் நிகழ்வொன்று நேற்று(10.04.2026)ஆம் திகதி பிற்பகள் 3.30மணிக்கு போரதீவுப்பற்று பிரதேசசபையின் வெல்லாவெளி கலாசாரமண்டபத்தில் நடைபெற்றது.
“வாழும் போதே வாழ்த்துவோம்” எனும் மகுட வாசகத்துடன் முன்னெடுக்கப்படும் இந்த மனிதாபிமான நிகழ்வானது, மட்டக்களப்பு பாடுமீன் அரிமா கழகம் (Lions Club of Batticaloa Singal City) மற்றும் போரதீவுப்பற்று பிரதேச சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
நமது நகரத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருப்பதில் முன்னின்று உழைக்கும் சுகாதாரப் பணியாளர்களின் சேவையை அங்கீகரிப்பதும், அவர்களைக் கௌரவிப்பதும் இந்த விழாவின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நிகழ்வானது Lions International District 306 D10 இன் அனுசரணையுடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடினமான சூழலிலும் அயராது உழைக்கும் முன்களப் பணியாளர்களுக்கு சமூகத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த உயரிய கௌரவம், அவர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர்களின் பிள்ளைகளுக்கு காற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இன்றைய நிகழ்வின் போது போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன்,
பாடுபமீன் Lions Club
மட்டக்களப்பு
மாவட்ட ஆளுநர் Lion. K. லோகேந்திரன்,
Lion P. சடாச்சர ராஜா
மாவட்ட ஆளுநர் இணைப்புப்பாளர்,