மட்டக்களப்பு பேத்தாழை ஸ்ரீ பாலீஸ்வரர் ஆலய 1008 சங்காபிஷேகப் பெருவிழா.!

​இயற்கை எழில் கொஞ்சும் மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை - பேத்தாழைப்பதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலயத்தின் "சகஸ்ர நாம 1008 சங்காபிஷேகப் பெருவிழா" எதிர்வரும் மே மாதம் 08 மற்றும் 09-ஆம் திகதிகளில் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.

​இலங்கையின் கிழக்கு மண்ணில் சைவநீதி தழைத்தோங்க, பராபவ வருட சித்திரை மாதம் 26-ஆம் நாள் (09.05.2026) சனிக்கிழமை அன்று இந்த மகோற்சவம் இடம்பெறவுள்ளது.

​ஆரம்ப நிகழ்வு (08.05.2026 - வெள்ளிக்கிழமை), மாலை 06.00 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசகம், அனுக்ஞை மற்றும் வாஸ்து சாந்தியுடன் கிரியைகள் ஆரம்பமாகும்.

தொடர்ந்து அடியவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்படும்.

​சங்காபிஷேகத் திருநாள் (09.05.2026 - சனிக்கிழமை)ஆம் திகதி காலை 06.00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் கும்பபூஜை, சங்காபிஷேகம் மற்றும் வேத பாராயணங்கள் இடம்பெறவுள்ளன.

காலை 06.30 மணிக்கு வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாற்குட பவனியும் ஆரம்பமாகும்.
​கிரியைகளை ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ ப. கண்ணன் குருக்கள் தலைமையில் உதவிக் குருக்கள் மற்றும் திருகோணமலைச் சேர்ந்த வேத விற்பன்னர்கள் இணைந்து நடாத்தவுள்ளனர்.

​மங்கல வாத்திய இசை முழங்க, மிகச் சிறப்பாக நடைபெறவுள்ள இந்த பக்திப் பெருவிழாவில் கலந்து கொண்டு எம்பெருமான் பாலீஸ்வரர் மற்றும் பாலாம்பிகை தேவியின் திருவருளைப் பெற்றுச் செல்லுமாறு ஆலயப் பரிபாலன சபையினர் அனைத்துப் பக்தர்களையும் அன்புடன் அழைக்கின்றனர்.

​"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"
புதியது பழையவை