மின்னல் தாக்கி ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர் உயிரிழப்பு.! மற்றொருவர் படுகாயம்.!

​காலி, கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

அத்துடன் மற்றுமொரு ஊழியர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (03.05.2026) அதிகாலை 12.30 மணியளவில் காலி மாவட்டத்தில் கடும் மழை பெய்திருந்தது.

இதன்போது, ஹபரடுவ - கொக்வத்த பகுதியில் (இலக்கம் 72/A) தங்கியிருந்த இரு ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மீது அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உள்ளேயே மின்னல் தாக்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட இருவரும் உடனடியாக 1990 சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை மூலம் காலி, கரபிட்டிய தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஒரு இளம்பெண் உயிரிழந்துள்ளார்.

​உயிரிழந்தவர் இமாஷா மதுபாஷினி திவன்ஷா (26 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

​காயமடைந்தவர் ஜி.ஏ. பியமதி (25 வயது) என்ற பெண் தொழிலாளி. இவர் தீக்காயங்களுடன் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

​இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை