இலங்கை ஆதிவாசிகளான வேடுவர் குலத்தின் தற்போதைய தலைவராக கருதப்படும் வன்னில எத்தோ இன்று(7.5.2026) காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தானிகல மகா பண்டாலகே சுதா வன்னில எத்தோ என்ற இயற்பெயரைக் கொண்ட அவர், பொதுவாக வன்னில எத்தோ என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்.
மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட வேடுவத்தலைவராகவும், இலங்கை ஆதிவாசிகளின் தலைவராகவும் அவர் செயற்பட்டிருந்தார்.
காசநோயின் காரணமாக அவர் வெலிசர காச நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
இந் நிலையில் அவர் தனது 62ஆவது வயதில் காலமானதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.