மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னஉப்போடை களப்பு பகுதியில் இரண்டு சடலங்கள் இன்று (07.05.2026) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சின்னஉப்போடையில் உள்ள களப்பின் பாலத்திற்கு அருகில் இந்த சடங்கள் இன்று மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு வந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இரண்டு சடலங்களும் ஆண்களின் சடலங்கள் எனவும் குறித்த சடலங்கள் அடையாளம் காணப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் கள்விற்பனை நிலையம் ஒன்றும் காணப்படும் நிலையில் அங்குவந்தவர்களாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
சடலம் காணப்படும் பகுதிக்கு அருகில் இரண்டு சைக்கிள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.