மட்டக்களப்பு மாவட்டம்
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் (தள வைத்தியசாலை) இன்று (27.05.2026) திடீரென தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
எனினும், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் சமயோசிதமான மற்றும் விரைவான செயல்பாட்டினால் தீ உடனடியாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
துரிதமாக செயல்பட்ட ஊழியர்கள்
வைத்தியசாலை வளாகத்தில் தீப்பரவல் ஏற்பட்டதைக் கவனித்த ஊழியர்கள், உடனடியாகச் செயல்பட்டு தீ மேலும் பரவாமல் தடுப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளில் இறங்கினர்.
இவர்களுடன் பாதுகாப்புத் தரப்பினரும் உடனடியாகக் கைகோர்த்து, கூட்டு முயற்சியுடன் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள வைத்தியசாலை நிர்வாகம்,
"ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் துரித நடவடிக்கையினால் பெரும் சேதங்கள் மற்றும் உயிராபத்துகள் எற்படாமல் தடுக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்தினால் மிகக் குறைந்தளவிலான சேதங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன,என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்தத் தீ விபத்தினால் வைத்தியசாலையின் அன்றாட மருத்துவச் சேவைகளுக்கோ அல்லது நோயாளர்களுக்கான சிகிச்சை நடவடிக்கைகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், அனைத்துச் சேவைகளும் தடையின்றி வழமை போன்று தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் நிர்வாகம் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தினரும் பாதுகாப்புத் தரப்பினரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.