மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி கண்ணகிஅம்மன் ஆலய வைகாசிப் பெருவிழா திருக்கதவு திறத்தலுடன் பக்திப்பூர்வமாக ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற, தொன்மை வாய்ந்த மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி ஸ்ரீ கண்ணகிஅம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பெருவிழா இன்று (23.05.2026) சனிக்கிழமை அதிகாலை "திருக்கதவு திறத்தல்" நிகழ்வுடன் மிக விமரிசையாகவும் பக்திப்பூர்வமாகவும் ஆரம்பமாகியுள்ளது.

​கிழக்கிலங்கையின் கண்ணகி வழிபாட்டு மரபில் தனக்கெனத் தனித்துவமான சடங்கு முறைகளைக் கொண்ட இவ்வாலயத்தின் பெருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு முறைப்படி காப்புக்கட்டப்பட்டு வழிபாடுகள் தொடங்கின. 

இன்று அதிகாலை மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் "அரோகரா" பக்தி கோஷங்களுக்கு மத்தியில் ஆலயத்தின் பிரதான திருக்கதவு திறக்கப்பட்டது.

​தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும் இப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான வரலாற்றுப் பிரசித்தி பெற்ற "திருக்குளிர்த்தி" சடங்கு, வரும் மே மாதம் 31ஆம் திகதி (31.05.2026) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று விழா மங்களகரமாக நிறைவடையவுள்ளது.
புதியது பழையவை