மாகாண சபைத் தேர்தலை தற்காலிகமாக பழைய முறையில் நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் இணக்கம் வெளியிட்டுள்ளன.
மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது தொடர்பில் அரசியல் கட்சிகளின் கருத்துகளை பெறும் நோக்கில் நேற்று (26) செவ்வாய்க்கிழமை பெப்ரல் அமைப்பினால் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்த அரசியல் கட்சிகள், தற்போதைய நிலையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு சிக்கலாக அமைந்துள்ள தேர்தல் திருத்தச் கலப்பு முறை தேர்தல் சட்டத்தைக் கைவிட்டு பழைய விகிதாசார முறையில் தேர்தல் நடத்துவதற்கான இணக்கம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவம் தொடர்பில் அந்தந்த அரசியல் கட்சிகள் சுயமாக தீர்மானம் எடுக்க அனுமதிப்பதற்கும் அரசியல் கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பதில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளன.