துறைநீலாவணையில் மாணவர்களின் ‘சித்திரை குதுகலம்’ - கலை நிகழ்வுகளுடன் பரிசளிப்பு விழா!

மட்டக்களப்பு ,மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகம், துறைநீலாவணை அறநெறிப் பாடசாலைகள் மற்றும் ஆலயங்கள் இணைந்து நடத்திய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான ‘சித்திரை குதுகலம்’ கலை விழா, இன்று(10.05.2026) துறைநீலாவணை சித்தி விநாயகர் வித்தியாலய வளாகத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது.

​மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ. உதயசிறிதர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

​இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக
​சு. இளமாறன் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபையின்  (துறைநீலாவணை வட்டார உறுப்பினர்)
​இ. சுதர்சன் (தலைவர், துறைநீலாவணை பொருளாதார கல்வி அபிவிருத்தி சங்கம்)
​எஸ். இராஜகோபால் (தலைவர், தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயம்)
​எஸ். புஸ்பராசா (தலைவர், முத்துமாரியம்மன் ஆலயம்)
​ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் பிரதேச செயலக இந்து கலாச்சார உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அறநெறிப் பாடசாலை அதிபர்களான க. சுரேந், சோ. சந்திரகுமார் உள்ளிட்ட ஆசிரியர்களும் மாணவர்களும் பங்கேற்றனர்.

​கலை நிகழ்வுகளும் கௌரவிப்பும்
​விழாவின் முக்கிய அங்கமாக மாணவர்களின் பல்வேறு கலை கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

​மேலும், கல்விப் பணியில் அர்ப்பணிப்புடன் செயற்படும் அறநெறிப் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டதுடன், பிரதேச செயலாளர் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து கௌரவம் அளிக்கப்பட்டது.

​இவ்விழாவானது பாரம்பரிய விழுமியங்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஒரு சிறந்த முயற்சியாக அமைந்திருந்ததாகப் பலரும் பாராட்டுத் தெரிவித்தனர்.

புதியது பழையவை