புதிய தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் முதலமைச்சரானதுமே 3 முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்குதல், 200 அலகுகளுக்கான இலவச மின்சாரம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்குவதற்கான ஆவணத்திலும் கையெழுத்திட்டுள்ளார்.
முதல் நடவடிக்கை
இதனையடுத்து கருத்து தெரிவித்த விஜய் தமிழ்நாடு தற்போது எந்த நிலைமையில் உள்ளது என்பதை பகிரங்கமாக அறிவித்த பின்னர் தமது பணியை முன்னெடுக்கவுள்ளதாக தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருளை கட்டுப்படுத்த இன்று(10.05.2026) முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அத்துடன் தமது நோக்கங்களை சரிவர நிறைவேற்றுவதற்கு சிறிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சட்டம் ஒழுங்கு சரிவர நிறைவேற்றப்படும் என்பதுடன் சிறுபான்மை மக்களுக்கான ஒரு அரசாக தமிழக வெற்றிக் கழகம் தமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.