இலங்கையில் 1976,யூன்,23, ம் திகதிக்குப் பிறகு நீதிமன்றங்களால் மரணதண்டனை விதிக்கப்பட்டாலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கு மனித உரிமை மீறல்கள் பற்றிய சர்வதேச அழுத்தங்கள், சர்வதேச உடன்படிக்கைகளில் இலங்கை கையொப்பமிட்டமை மற்றும் மரணதண்டனைக்கு எதிரான உள்நாட்டு எதிர்ப்புகள் ஆகியவையே முக்கிய காரணங்களாகும்.
மரணதண்டனை நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களாக
இலங்கை, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்தில் கைச்சாத்திட்டுள்ளது. இதற்கமைய மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவது மனித உரிமைகளுக்கான சர்வதேச தரங்களுக்கு முரணானதாகக் கருதப்படுகிறது.
இலங்கையானது மரணதண்டனையை முடிவுக்குக் கொண்டுவரும் சர்வதேச தீர்மானங்களை ஆதரித்து வருகிறது. 1976 ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தவொரு குற்றவாளிக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை.
பௌத்தம் உள்ளிட்ட இலங்கையின் பிரதான மதங்கள் வன்முறையற்ற மற்றும் உயிரைக் கொல்லாத கோட்பாடுகளைக் கொண்டுள்ளன. மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற அமைப்புகள் மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் எனத் தொடர்ந்து பரிந்துரைத்து வருகின்றன.
நீதிமன்றங்கள் தற்போதும் தீவிர குற்றங்களுக்கு மரணதண்டனை விதித்தாலும், அவை நடைமுறையில் ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகின்றன.
இலங்கையில் மரணதண்டனை ஆயுள்தண்டனையாகவே தொடர்கிறது.
ஆனால் 1956, தொடக்கம் 2026, வரை 70, வருடங்களாக தமிழினனப்படுகொலை தொடர்கிறது இதற்கு சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்தில் கைச்சாத்திட்ட இலங்கையை அனைத்தைல மனித உரிமைகளுக்கான சர்வதேச அமைப்புகள் கண்டிப்பதும் இல்லை. தண்டிப்பதும் இல்லை.
-அரியம்/25/05/2026