ஆபத்தான நிலையில் மின்கம்பம்- பாரிய அனர்த்தம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்குமா மின்சார சபை?

அம்பாறை மாவட்டம் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் வீதியில் அமைந்துள்ள மின்சாரக் கம்பம் மற்றும் மின் விநியோகச் சந்திப் பெட்டி (Junction Box) என்பன பலத்த சேதமடைந்து விழுந்துவிடும் நிலையில் காணப்படுவதால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

​அதிகளவான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் இப்பகுதியில், மின்சார சபைக்குச் சொந்தமான இந்த கட்டமைப்பு நீண்டகாலமாகப் பராமரிப்பின்றி சிதைவடைந்துள்ளது.

தற்போது இது எந்நேரமும் சரிந்து விழக்கூடிய ஆபத்தான நிலையில் சரிந்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

​இது குறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில்.

​மழை மற்றும் காற்று வீசும் நேரங்களில் இந்த மின்கம்பத்தின் நிலை இன்னும் மோசமடைகிறது. 

அருகில் மின் விநியோகப் பெட்டியும் சேதமடைந்து திறந்து காணப்படுவதால் மின்சாரக் கசிவு ஏற்படும் அச்சம் நிலவுகிறது. 

ஒரு பாரிய விபத்து நடக்கும் வரை அதிகாரிகள் காத்திருக்கக் கூடாது,எனத் தெரிவித்தனர்.

​இலங்கை மின்சார சபையின் (CEB) கல்முனைப் பிராந்திய அதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, சேதமடைந்த மின் கட்டமைப்பைப் புனரமைக்க அல்லது புதிய மின் கம்பத்தைப் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அவசரமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

​அனர்த்தங்கள் ஏற்படும் முன்னரே உரிய தரப்பினர் இதற்கான தீர்வை வழங்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
புதியது பழையவை