கழுத்து வெட்டப்பட்ட தலை ஒன்று அம்பலாங்கொடை மாமண்டல பகுதியில் சிலை ஒன்றில் தொங்கவிடப்பட்ட நிலையில் இன்று(12.05.2026) பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அம்பலாந்தோட்டை - போகுடுயாய பகுதியில் நபர் ஒருவர் கொல்லப்பட்டமை மற்றும் மற்றொருவருக்கு பாரிய காயம் ஏற்படுத்தியமை தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட நபர் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி மாமடலை - அலேகொடை பகுதியில் இடம்பெற்ற மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் ஆவார் எனவும் மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், குறித்த கொலைக் குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து, கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியே பிணையில் விடுதலையாகி வீடு திரும்பியிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் மாமா முறையான ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும் அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரை கொலை செய்வதற்காக மூவர் அவரது வீட்டிற்கு வந்துள்ளதுடன், அவரை கொலை செய்த பின்னர், அவரது தலை துண்டிக்கப்பட்டு மாமடல சந்தியில் உள்ள ஒரு சிலையில் வைத்து விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.