எருமை மாட்டுடன் மோதி கல்வித் திணைக்கள வேன் விபத்து.!பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.!

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் தங்கநகர் பகுதியில் இன்று (16.05.2026) அதிகாலை வேளையில் வீதி விபத்தொன்று சம்பவித்துள்ளது.

​கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு சொந்தமான வேன் ஒன்று, வீதியின் குறுக்கே வந்த எருமை மாட்டுடன் பலமாக மோதியதே இந்த விபத்துக்குக் காரணமாகும்.

​விபத்து நடந்த சமயத்தில் வாகனத்தில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்களோ அல்லது பாதிப்புகளோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

​வேன் மோதிய வேகத்தில், சம்பவ இடத்திலேயே அந்த எருமை மாடு பரிதாபகரமாக பலியாகியுள்ளது.

​விபத்து காரணமாக வாகனத்தின் முன்பகுதிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை