மட்டக்களப்பு குருமண்வெளியில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்.!

மட்டக்களப்பு, குருமண்வெளி பொது நூலகமும் அருள் செல்வநாயகம் வாசகர் வட்டமும் இணைந்து நடத்திய இலவச ஆயுர்வேத வைத்திய சேவை முகாம் நேற்று (23/05/2026) சனிக்கிழமை குருமண்வெளி பொது நூலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

​குருமண்வெளி பொது நூலகப் பொறுப்பாளர் சீ. ரவீந்திரன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

​மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் பெரிய கல்லாறு ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பு உத்தியோகத்தரும், பிரபல ஆயுர்வேத மருத்துவருமான திருமதி. காஞ்சனா தர்மேந்திரா மற்றும் அவரது மருத்துவக் குழுவினர், உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கான மருத்துவ ஆலோசனைகளையும் இலவச மருந்துகளையும் வழங்கினர்.

​இவ் இலவச மருத்துவ முகாமில் குருமண்வெளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நோயாளிகள் கலந்துகொண்டு, தங்களுக்கான மருத்துவச் சேவைகளைப் பெற்றுக் பயனடைந்தனர்.

புதியது பழையவை