மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேசத்தில் வசிக்கும் விசேட தேவையுடைய 30 குடும்பங்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் முகமாக, சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய குடிநீர் கிணறுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (03.06.2026) வெற்றிகரமாக நடைபெற்றது.
கோவில் போரதீவை பிறப்பிடமாகக் கொண்டு, தற்போது லண்டனில் தொழிலதிபர்களாக விளங்கும் மார்க்கண்டு நேசராசா மற்றும் மார்க்கண்டு லிங்கராசா ஆகியோரின் குடும்ப உறவுகளின் முழுமையான நிதிப் பங்களிப்புடன் இந்த மனிதாபிமான அறப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமரத்துவம் அடைந்த தங்களது குடும்ப உறுப்பினர்களான மார்க்கண்டு பாக்கியம் மற்றும் மனோன்மணி ஆகியோரின் நினைவாக, இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக குடிநீருக்காக பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்த தங்களுக்கு, லண்டன் தொழிலதிபர் குடும்பத்தினர் செய்துள்ள இந்த உதவி பெரும் நிம்மதியை அளித்துள்ளதாக இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
இன்று நடைபெற்ற இந்த அடிக்கல் நாட்டு விழாவில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் உறுப்பினர் ம.கோபிநாத், கிராம முக்கியஸ்தர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.