முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து விழுந்ததில் மாணவன் உட்பட மூவர் உயிரிழப்பு.!

நாவலப்பிட்டியில் இன்று(04.06.2026) காலை நேரிட்ட அதிர்ச்சிகரமான விபத்தில், பாடசாலை மாணவன் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இன்று (04) காலை வேளையில், நாவலப்பிட்டி - மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி முச்சக்கரவண்டி ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக வீதியோரத்தில் இருந்த பாரிய மரமொன்று முச்சக்கரவண்டியின் மீது திடீரென முறிந்து விழுந்துள்ளது.
இந்த கொடூர விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த கலபொட தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பாடசாலை மாணவனும், இரண்டு பெண்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்த போதிலும், அதன் சாரதி (ஓட்டுநர்) எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
​இச் சோகமான சம்பவம் குறித்து நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதியது பழையவை