நெல்லுக்கான விலையை அதிகரிக்குமாறும், நெல் சந்தைப்படுத்தல் சபையூடாக (PMB) நியாயமான விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய வலியுறுத்தியும் மட்டக்களப்பில் விவசாயிகள் இன்று(23.06.2026) பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக ஒன்றிணைந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதி விவசாயிகளும், சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி அமைதி வழியில் இப்போராட்டத்தை நடத்தினர்.
தற்போதைய உற்பத்திச் செலவுக்கு ஏற்ப நெல்லின் விலையை அதிகரிக்க வேண்டும்.
இடைத்தரகர்களின் சுரண்டலைத் தடுக்க, அரசு நெல் சந்தைப்படுத்தல் சபை ஊடாக நேரடியாக நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டும்.
உரம், எரிபொருள் விலை உயர்வால் கடனாளியாக மாறியுள்ள தமக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் எனவும், தவறின் அடுத்தகட்டமாகப் பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.