கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை சதுரங்கப் போட்டியில் வரலாற்றுச் சாதனை!

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்கப் போட்டியில் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை வரலாற்றுச் சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளது.

​கடந்த சனிக்கிழமை (27.06.2026)ஆம் திகதி  கிண்ணியாவில் நடைபெற்ற இம்மாகாண மட்ட சதுரங்கப் போட்டியில், கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை அணியினர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று (Third Champion) பெரும் பெருமை சேர்த்துள்ளனர்.

​இப்பாடசாலையில் சதுரங்க விளையாட்டு அண்மையிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு, மாணவர்களிடையே ஊக்குவிக்கப்பட்டது.

கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் றெஜினோட் அவர்களின் வழிநடத்தலிலும், முறையான ஊக்கப்படுத்துதலின் விளைவாகவுமே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி சாத்தியமாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இச்சாதனையானது, கல்லூரியின் விளையாட்டுத் துறை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது.

​கிழக்கு மாகாண மட்டத்தில் சாதனை படைத்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்த சதுரங்க வீராங்கனைகளுக்கு, கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகம் தமது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
புதியது பழையவை