அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இன்று(29.06.2026) காலை 11.40 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 63 வயதுடைய ராஜு என்ற முதியவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்பாரை மாவட்ட உயிர் காப்பு மற்றும் அவசர மீட்ப்பு குழுவினர் மற்றும் பொதுமக்களின் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.