மட்டக்களப்பில் சட்டவிரோத சாராய உற்பத்தி நிலையம் முற்றுகை.!

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அகத்தியற்குளம் காட்டுப் பகுதியில் இன்று  (03.06.2026)மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையின் போது, சட்டவிரோத வடி சாராய உற்பத்தி நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டுள்ளன.

​கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈரளக்குளம், அகத்தியர்குளம் காட்டுப் பகுதியில் சட்டவிரோத முறையில் சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

​இதன்போது, விற்பனைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வடி சாராயமும், அதனை உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 
அத்துடன், இந்த சட்டவிரோத உற்பத்தியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

​கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட சான்றுப் பொருட்கள் குறித்த மேலதிக விசாரணைகளையும், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளையும் கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

​இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேசசபை உறுப்பினர் சிவானந்தன் வவானந்தன், "நமது சமூகத்தில் மலிந்து வரும் சட்டவிரோத செயல்களை ஒழித்து, பாதுகாப்பானதும் ஆரோக்கியமானதுமான ஒரு சமூகத்தை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதியது பழையவை