பிரதேச சபையின் துரித நடவடிக்கை- மட்டக்களப்பு துறைநீலாவணை குளக்கட்டு வீதி சீரமைப்பு!

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில் பற்று (களுதாவளை) பிரதேச சபைக்குட்பட்ட துறைநீலாவணை குளக்கட்டு வீதியினைச் சீரமைக்கும் விசேட சிரமதானப் பணி நேற்று (02.06.2026) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

​மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அவர்களின் ஆலோசனையின் பேரில், துறைநீலாவணை வட்டார உறுப்பினர் சுந்தரலிங்கம் இளமாறன் அவர்களின் துரித முயற்சியினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

​இவ்வீதியின் இருமருங்கிலும் நீண்ட நாட்களாகப் பற்றைக்காடுகள் மண்டிப் போயிருந்ததாலும், வீதி குண்டும் குழியுமாகக் காணப்பட்டதாலும், இப்பாதையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் இரவு மற்றும் பகல் வேளைகளில் பெரும் அச்சத்தோடும் அசெளகரியங்களோடும் பயணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

​பொதுமக்களின் இந்த நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாக, பிரதேச சபையின் கனரக J.C.B வாகனங்கள் கொண்டு வரப்பட்டு, வீதியோரப் பற்றைக் காடுகள் துப்பரவு செய்யப்பட்டதுடன், குண்டும் குழியுமான பாதையும் செப்பனிட்டுச் சீரமைக்கப்பட்டது.

​இவ்வீதி தற்போது முழுமையாகத் துப்பரவு செய்யப்பட்டுச் சீரமைக்கப்பட்டுள்ளதால், பிரதேச பொதுமக்கள் மற்றும் பயணிகள் இனிவரும் காலங்களில் எவ்வித அச்சமும் இன்றி, பாதுகாப்பாகப் பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபையினரின் இந்தத் துரித நடவடிக்கைக்குப் பகுதி மக்கள் தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை