மட்டக்களப்பு போரதீவுப்பற்று திக்கோடை தும்பாலை பகுதியிலுள்ள வேலாமை வயல் நிலத்தில் இன்று(20.06.2026) ஆம் திகதி சனிக்கிழமை யானை ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
யானையின் மரணத்திற்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், சம்பவம் குறித்து வெல்லாவெளி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், முதற்கட்ட விசாரணைக்காக குறித்த வயல் காணியின் உரிமையாளரை வெல்லாவெளி பொலிஸார் நிலையத்திற்கு அழைத்துள்ளதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.