இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி கைது!

தொழிலதிபர் ஒருவரிடம் 1 மில்லியன் ரூபாய் லஞ்சம் கோரியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் களுத்துறை சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர்

இலஞ்சம் அல்லது ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அதிகாரி, களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) அலுவலகத்தின் கீழ் இயங்கும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.

பொலிஸாரின் தகவலின்படி, களுத்துறை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான வாகனம் தொடர்பாகச் சிறப்புக்குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வந்த நிலையில், அந்த விசாரணையைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு எதையும் பதிவு செய்யாமல் இருப்பதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரி அவரிடம் 10 லட்சம் ரூபாயைக் கோரியதாகக் கூறப்படுகிறது.

அந்தக் பொலிஸ் அதிகாரி ஆரம்பத்தில் முறைப்பாட்டாளரிடமிருந்து 1,00,000 ரூபாய் லஞ்சத்தைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

மீதமுள்ள 9,00,000 ரூபாயைப் பெற முயன்றபோது களுத்துறையில் உள்ள ஒரு ஹோட்டலில் அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
புதியது பழையவை